சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருமணமான மூன்று நாளில் போலீஸ்காரர் மனைவி தற்கொலை

Added : பிப் 12, 2020
Advertisement

வேலூர்: ஆற்காடு அருகே, திருமணமான மூன்று நாளில், தாய் வீட்டுக்கு விருந்துக்கு சென்ற, சென்னை போலீஸ்காரரின் மனைவி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர் மாவட்டம், ஆற்காடு அடுத்த சக்கரமல்லூரை சேர்ந்த சீனிவாசன் மகள் திவ்யா, 21; ஆற்காட்டில் உள்ள தனியார் கல்லூரியில், பி.எஸ்சி., மூன்றாமாண்டு படித்து வந்தார். இவருக்கும், சென்னை திருநின்றவூரை சேர்ந்த போலீஸ்காரர் ராகவேந்திரன், 25, என்பவருக்கும், கடந்த, 7ல், திருமணமானது. நேற்று முன்தினம் திவ்யா, கணவர் ராகவேந்திரனுடன், சக்கரமல்லூர் கிராமத்தில் உள்ள, தாய் வீட்டுக்கு விருந்துக்கு சென்றார். வீட்டில் எல்லோரிடமும் சகஜமாக பேசினார். சிறிது நேரம் கழித்து வீட்டிலுள்ள அறையில் ஓய்வு எடுப்பதாக கூறிச்சென்றவர், நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த, அவரது குடும்பத்தினர் உள்ளே தாள் போட்டிருந்த கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு திவ்யா, தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து, ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X