சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடிநீரில் கழிவுநீர் கலப்பு: பொதுமக்கள் முற்றுகை

Added : பிப் 12, 2020
Advertisement

திருவண்ணாமலை: குடிநீரில், கழிவுநீர் கலப்பதை கண்டித்து, பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட, 15வது வார்டு, திருவள்ளுவர் நகர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அதில், கழிவுநீர் கலந்து வந்தது. இதுகுறித்து, பேரூராட்சி அலுவலகத்தில், அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், நேற்று பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, தர்ணாவில் ஈடுபட்டனர். செங்கம் போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X