ஏரியில் மூழ்கி மாணவர் சாவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏரியில் மூழ்கி மாணவர் சாவு

Added : பிப் 12, 2020
Share
ஆரணி: ஆரணி அருகே, ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர் பலியானார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சேவூரை சேர்ந்த நாராயணன் மகன் வேணுகோபால், 11; இவர், அங்குள்ள அரசு பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, பள்ளி முடிந்து, அப்பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்றார். நீண்ட நேரமாகியும் வேணுகோபால் வீடு திரும்பாததால், அவரது தாய் லட்சுமி மற்றும்

ஆரணி: ஆரணி அருகே, ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர் பலியானார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சேவூரை சேர்ந்த நாராயணன் மகன் வேணுகோபால், 11; இவர், அங்குள்ள அரசு பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, பள்ளி முடிந்து, அப்பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்றார். நீண்ட நேரமாகியும் வேணுகோபால் வீடு திரும்பாததால், அவரது தாய் லட்சுமி மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடினர். சந்தேகத்தின்படி, சின்ன ஏரிக்கு சென்று தேடியபோது, வேணுகோபால் நீரில் மூழ்கி, சடலமாக மிதந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவலின்படி, ஆரணி தாலுகா போலீசார் சம்பவ இடம் சென்று, மாணவனின் சடலத்தை கைப்பற்றினர். தொடர்ந்து இது குறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X