சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சொத்து தகராறில் அக்காவை கொன்ற தம்பி கைது

Added : பிப் 12, 2020
Advertisement

ஆரணி: சொத்து தகராறில் அக்காவை, கத்தியால் குத்தி கொலை செய்த தம்பியை, போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த புதுக்காமூரை சேர்ந்தவர் கிறிஸ்டி எலிசபெத், 55. இவர் தனது கணவருடன், தாய் சகுந்தலா வீட்டில் வசித்து வந்தார். கிறிஸ்டியின் தம்பி, ஐசக் சந்தோஷ், 49; கார் டிரைவர்; இவர், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு, போதிய வருமானம் இல்லாததால், சரிவர வீட்டு வாடகை செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார். அவ்வப்போது, தனது தாய் சகுந்தலாவிடம், 'வீட்டை பிரித்து கொடு' என கேட்டு வந்துள்ளார். இதற்கு கிறிஸ்டி சம்மதிக்கவில்லை. இது தொடர்பாக அக்கா, தம்பி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சொத்து பிரச்னை குறித்து, பேசி முடிவெடுக்க வேண்டும் எனக்கருதி ஐசக்சந்தோஷ், நேற்று காலை, 7:00 மணிக்கு, தனது தாயை சந்திக்கச்சென்றார். அப்போது சொத்து பிரிக்கக்கூடாது என, கிறிஸ்டி மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தார். இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த ஐசக் சந்தோஷ், காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து, கிறிஸ்டியின் வயிற்றில் சரமாரியாக குத்தினார். மேலும், அதே கத்தியால், தனது கைகளையும் கிழித்துக்கொண்டார். பின், ஆரணி டவுன் போலீஸ் ஸ்டேஷன் சென்ற ஐசக், நடந்த சம்பவத்தை கூறினார். இதனிடையே போலீசார் சம்பவ இடம் சென்றபோது, கிறிஸ்டி பலியானது தெரிந்தது. இதையடுத்து, ஐசக்கை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X