சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் மோதி பெண் பலி

Added : பிப் 12, 2020
Advertisement

பெரணமல்லூர்: திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்த கொழப்பலூரை சேர்ந்தவர் முனிசாமி மனைவி ஜீவா, 56. இவர், நேற்று, ரகுநாதசமுத்திரம் கிராமத்தில் நடந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு காலை, 11:00 மணிக்கு, சென்றுவிட்டு, வீடு திரும்பினார். கன்னிக்கோவில் அருகே சென்றபோது, எதிரே செங்கம் பூண்டியை சேர்ந்த சத்தியமூர்த்தி, 28, ஓட்டி வந்த ஹோண்டா பைக், ஜீவா மீது மோதியது. இதில், இருவரும் படுகாயமடைந்தனர். பொதுமக்கள் ஜீவாவை மீட்டு, வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். இது குறித்து, பெரணமல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X