புகார் பெட்டி - சேலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - சேலம்

Added : பிப் 12, 2020
Share

சாலை விரிவாக்கம் அவசியம்: தலைவாசல், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி, சார்வாய், மணிவிழுந்தான் பஸ் ஸ்டாப் பகுதியில், சாலை விரிவுபடுத்தப்படவில்லை. இதனால், நெடுஞ்சாலையில் பஸ்களை நிறுத்தி, பயணியரை ஏற்றி, இறக்கி செல்கின்றனர். சாலையை கடப்போர், பின்புறம் வரும் வாகனங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர். அதனால், பஸ்ஸ்டாப் பகுதியில், சாலையை விரிவுபடுத்தினால்தான் விபத்துகளை தவிர்க்க முடியும்.

- ம.வினோத் குமார், சாத்தப்பாடி.

ஆங்காங்கே பள்ளத்தால் ஆபத்து: சங்ககிரி, பழைய இடைப்பாடி சாலை குறுக்கே, காவிரி நீர் செல்ல, ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டு, குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி பஞ்சராவதோடு சேதமடைகின்றன. குறிப்பாக, இரவில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். சாலையை சீரமைக்கக்கோரி, பேரூராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

- தி.ராபட், சங்ககிரி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X