சீரமைக்கப்பட்ட தேர் இன்று வெள்ளோட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சீரமைக்கப்பட்ட தேர் இன்று வெள்ளோட்டம்

Added : பிப் 12, 2020
Share

கெங்கவல்லி: வீரகனூர் மாரியம்மன் கோவிலில், சீரமைக்கப்பட்ட தேர், இன்று வெள்ளோட்டம் விடப்படுகிறது. கெங்கவல்லி அருகே, வீரகனூரில், மாரியம்மன், காளியம்மன், பொன்னாளியம்மன் கோவில்கள், தனித்தனியாக உள்ளன. அது, வீரகனூர், சொக்கனூர், வீ.ராமநாதபுரம், ராயர்பாளையம் கிராமங்களைச் சேர்ந்த, 32 சமுதாயத்தினரின் குலதெய்வமாக உள்ளது. அங்கு, 1996ல் நடந்த திருவிழாவுக்கு பின், தேரை பயன்படுத்தவில்லை. சீரமைக்க, கோவில் நிர்வாகம் முடிவு செய்து, அதற்கான பணி, இரு ஆண்டாக மேற்கொள்ளப்பட்டது. தேரின் உயரம், 23 அடி. நான்கு லட்சம் ரூபாய் செலவில், திருச்சி, 'பெல்' நிறுவனத்தில் வடிவமைத்த இரும்பு தேர் சக்கரம், அடிச்சட்டத்துடன் சீரமைக்கப்பட்ட தேர், ஒன்பது நிலைகளை கொண்டது. புது வண்ணம் தீட்டி, புதுப்பொலிவுடன் தேர் காட்சியளிக்கிறது. சீரமைக்கப்பட்ட இத்தேரின் வெள்ளோட்டம், இன்று காலை, 9:30 மணிக்கு நடக்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X