பொது செய்தி

தமிழ்நாடு

நாளை விஷ்ணுபதி புண்யகால பூஜை

Added : பிப் 12, 2020
Advertisement

வீரபாண்டி: திருமலைகிரி வரதராஜ பெருமாள் கோவிலில், விஷ்ணுபதி புண்ணியகால பூஜை, நாளை நடக்கவுள்ளது. மாசி மாத பிறப்பையொட்டி, விஷ்ணுபதி கமிட்டி சார்பில், சேலம் மாவட்டம், இனாம் வேடுகத்தாம்பட்டி, திருமலைகிரி வரதராஜ பெருமாள் கோவிலில், விஷ்ணுபதி புண்யகால பூஜை, நாளை நடக்கவுள்ளது. அத்துடன், கணபதி, லட்சுமி, சுதர்சன, தன்வந்திரி யாகத்துடன், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள், வெற்றி பெற வேண்டி, பேனா, நோட்டுப்புத்தகங்களை வைத்து, லட்சுமி ஹயக்ரீவ யாகம் செய்யப்படும். முடிவில், யாகத்தில் வைத்து பூஜித்த நோட்டு, புத்தகம், பேனாக்கள், மாணவர்களுக்கு வழங்கப்படும்.
மந்திரம்: அதேபோல், 'அஉம் சென்றாயபெருமாளே நமக' என்ற மந்திரத்தை, நடப்பாண்டு அறிமுகப்படுத்தியுள்ளனர். திருமண தடை, குழந்தை பாக்கியம், வீடு கட்டுதல், வழக்கு விவகாரங்கள், தேர்வில் வெற்றி, வேலை வேண்டி என, பல்வேறு வேண்டுதல் நிறைவேற, அந்த மந்திரத்தை குறைந்தபட்சம், 1,008 முறை, முடிந்தளவு லட்சம் முறை கூட எழுதி, 6 ரூபாய், 'ஸ்டாம்ப்' ஒட்டி, முகவரி எழுதப்பட்ட இரு கவர்களுடன், வரும் மே, 14ல், இரும்பாலை பிரதான சாலை, அழகுசமுத்திரம் பஸ் ஸ்டாப், கருக்கல்வாடி கரியபெருமாள் கோவிலில் நடக்கவுள்ள விஷ்ணுபதி புண்யகாலபூஜையின்போது கொடுக்க வேண்டும். இந்த கடிதங்கள், கங்கை, பிரம்மபுத்திரா, ஹரித்துவார், ரிஷிகேஷ், கோதாவரி, நர்மதை, காவிரி, அமராவதி, சபரிமலை பம்பா, பவானி ஆறுகள் மட்டுமின்றி, இந்துமகா சமுத்திரம், கன்னியாகுமரி, திருமலை திருப்பதி ஆழ்வார்தீர்த்தம் ஆகிய இடங்களில் கரைக்கப்படவுள்ளதாக, விஷ்ணுபதி கமிட்டியினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X