பொது செய்தி

தமிழ்நாடு

வெறிச்சோடிய இடைப்பாடி; முகாம் அமைத்து போலீஸ் பாதுகாப்பு

Added : பிப் 12, 2020
Share
Advertisement

இடைப்பாடி: இடைப்பாடியிலிருந்து பலர், பழநி மலைக்கு பாதயாத்திரை சென்றுள்ளதால், 15 இடங்களில் முகாம் அமைத்து, போலீசார், ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.
இடைப்பாடி, அதன் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த முருகபக்தர்கள், ஆண்டுதோறும், பழநி மலைக்கு, ஆன்மிக பாதயாத்திரை மேற்கொள்கின்றனர். நடப்பாண்டும், மேட்டுத்தெரு, ஆலச்சம்பாளையம், வெள்ளாண்டிவலசு, கவுண்டம்பட்டி, இடைப்பாடி பருவதராஜகுல சமுதாய மக்கள், சித்தூர், புளியம்பட்டி, ஆடையூர், நாச்சூர் பக்தர்கள் என, பல்வேறு குழுக்களாக, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், இடைப்பாடியிலிருந்து, பழநிக்கு பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர். இதனால், இடைப்பாடி பகுதியே வெறிச்சோடியுள்ளது. அங்குள்ள விசைத்தறி கூடங்கள், பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், கொள்ளை சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளதால், 50க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, இடைப்பாடி நகர், ஆலச்சம்பாளையம், கவுண்டம்பட்டி, வெள்ளாண்டிவலசு, மேட்டுத்தெரு, பஸ் ஸ்டாண்ட், நைனாம்பட்டி உள்பட, 15 இடங்களில் முகாம் அமைத்து, போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X