பொது செய்தி

தமிழ்நாடு

அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண் பட்டயப்பயிற்சி சேர்க்கை

Added : பிப் 12, 2020
Advertisement

சேலம்: சேலம், நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின், அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண் பட்டயப்பயிற்சிக்கு, சேர்க்கை நடக்கிறது. இதுகுறித்து, கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர், துணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கை: கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களை, பயிற்சியாளர்களாக சேர்த்து, அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண் பட்டயப்பயிற்சியை தொடங்க, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆணை வழங்கியுள்ளார். 2019 - 2020 கல்வியாண்டுக்கு, பயிற்சி விண்ணப்பம், கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், கடந்த, 5ல் தொடங்கி, வரும் மார்ச், 6 வரை வினியோகிக்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, மார்ச், 6க்குள், மேலாண்மை நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பயிற்சியாளர் சேர்க்கைக்கு, கல்வித்தகுதி, 10ம் வகுப்பு தேர்ச்சி அவசியம். கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள், வயது வரம்பின்றி, பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் தகுதியுடையவர். தமிழக அரசு, பயிற்சிக்கு ஆண்டு கட்டணமாக, 12 ஆயிரத்து, 550 ரூபாய் நிர்ணயித்துள்ளது. கூட்டுறவு நிறுவனப்பணியாளர் தவிர, தனியார் விண்ணப்பதாரர்களுக்கு அனுமதி இல்லை. விபரங்களுக்கு, 0427 - 2240944 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X