பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - சேலம்

Added : பிப் 12, 2020
Advertisement

பள்ளி அருகே பள்ளத்தால் விபத்து: ஆட்டையாம்பட்டியிலிருந்து, முத்தனம்பாளையம், மாமுண்டி செல்லும் சாலையில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே, குழாய் உடைப்பை சரிசெய்ய, நான்கு மாதத்துக்கு முன் பள்ளம் தோண்டி, முறையாக மூடாமல் விட்டுள்ளனர். இதனால், அந்த வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், வளைவில் திரும்பும்போது, பள்ளத்தில் இறங்கி தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். இதனால், உயிரிழப்பு ஏற்படும் முன், அதிகாரிகள், பள்ளத்தை சீரமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திறந்தவெளி கிணறு; காத்திருக்கு ஆபத்து: இடைப்பாடி, ஒட்டப்பட்டி, மாரியம்மன் கோவில் அருகே, நகராட்சியால், 50 ஆண்டுக்கு முன், திறந்தவெளி கிணறு ஏற்படுத்தப்பட்டது. 50 அடி ஆழமுள்ள கிணற்றில், சிறிதளவு தண்ணீர் மட்டும் உள்ளது. அதன் சுற்றுச்சுவர் உயரம் குறைவாக உள்ள நிலையில், அப்பகுதியிலுள்ள சிறுவர்கள், கிணற்றை எட்டிப்பார்த்து விளையாடி வருகின்றனர். அதனால், தவறி விழும் அபாயம் உள்ளதால், கிணற்றின் மேற்புறம் கம்பி வளையம் அமைப்பது அவசியம்.

தொங்கும் கம்பி; விபத்துக்கு வழி: இளம்பிள்ளை - சின்னப்பம்பட்டி பிரதான சாலை, கூட்டத்துபுளியமரம் அருகே, கடந்தாண்டு, புது மின்மாற்றி அமைத்தனர். அப்போது, கம்பங்கள் இடையே, கம்பியை மாற்றியமைத்தனர். ஆனால், அந்த கம்பிகள், தாழ்வாக தொங்கியபடியே உள்ளன. அதனால், பலத்த காற்று வீசும்போது, ஒன்றோடொன்று உரசி தீப்பொறி பறக்கிறது. பாரம் ஏற்றி, அந்த வழியாக செல்லும் வாகனங்களில், கம்பிகள் உரசுவதால், முன்னெச்சரிக்கையாக உயர்த்திக் கட்ட வேண்டும்.

புற்களுக்கு தீ; புகையால் அவதி: சங்ககிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலை, ஆவரங்கம்பாளையம் சாலையோரம், நெடுஞ்சாலைத்துறை சார்பில், புல்வெளி அமைத்து, பணியாளர்களால் பராமரிக்கப்படுகிறது. ஆனால், தண்ணீரின்றி புல் காய்ந்து காணப்படுவதால், சிலர் தீ வைத்து விடுகின்றனர். இதனால், சாலை முழுவதும் புகைமூட்டம் ஏற்பட்டு, எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல், விபத்து அபாயம் நிலவுகிறது. அதனால், புல்வெளிக்கு தீ வைப்பவர் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குப்பை கிடங்காக மாறும் மார்க்கெட்: தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டில், வீணாகும் கழிவு, குப்பை ஆகியவை, மார்க்கெட்டின் பின்புறமுள்ள தலைவாசல் ஏரியில் கொட்டப்படுகிறது. அதேபோல், அருகிலுள்ள, பஸ் ஸ்டாண்ட் சுற்றுவட்டாரங்களில் செயல்படும் கடைகளிலிருந்து வெளியேற்றப்படும் குப்பை, பிளாஸ்டிக் கழிவும் கொட்டப்படுகின்றன. இதனால், மார்க்கெட்டின் ஒரு பகுதி, குப்பை கிடங்காக மாறி வருகிறது. இதுகுறித்து, அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X