பொது செய்தி

தமிழ்நாடு

கல்வீச்சு சம்பவம் எதிரொலி: கைலாசநாதர் கோவில் திருவிழா நிறுத்தம்

Added : பிப் 12, 2020 | கருத்துகள் (1)
Advertisement

ஓமலூர்: கல்வீச்சு சம்பவத்தால், தைப்பூச திருவிழா தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், தாரமங்கலம், கைலாசநாதர் கோவிலில், தைப்பூச தேரோட்ட நிறைவு விழா, நேற்று முன்தினம் நடந்தது. அதில், தேர் நிலையை அடைந்ததும், சுவாமியை கோவிலுக்கு அழைக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது, தேரோட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பானது. தொடர்ந்து, தாக்கியவர்களை கைது செய்யக்கோரி, ஒரு தரப்பினர், சுவாமியை கோவிலுக்கு கொண்டு செல்லவிடாமல் தடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், இரு தரப்பிலும் இளைஞர்கள் கூட்டமாக திரண்டு, ஒருவர் மீது ஒருவர், கல்வீச்சில் ஈடுபட்டனர். போலீசார், அவர்களை கலைந்து போகச்செய்தனர். பின், அப்பகுதியில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம், பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியதால், கோவிலில் அடுத்து நடக்கவிருந்த நடராஜர் தரிசனம், தெப்பத்தேர் உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை, தற்காலிகமாக நிறுத்திவைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், அமைதி பேச்சுவார்த்தைக்கு பின், தைப்பூச பண்டிகை நடக்கும்.

31 பேர் மீது வழக்கு: கோழிகாட்டானூரைச் சேர்ந்த, ஹிட்டாச்சி ஆப்பரேட்டர் விக்னேஷ், 23, புகார்படி, தாரமங்கலத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன், சக்திவேல், ஜெகதீஸ்வரர் உள்பட, 21 பேர் மீதும், மற்றொரு தரப்பில், தாரமங்கலம், 11வது வார்டு நடராஜ், 36, புகார்படி, சின்னப்பம்பட்டி சின்ராஜ், விஜய், துட்டம்பட்டி மாதையன் உள்பட, 10 பேர் மீதும், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்பட, ஆறு பிரிவில் வழக்குப்பதிந்து, தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

எம்.எல்.ஏ., ஆலோசனை: இச்சம்பவம் தொடர்பாக, நேற்று, கைலாசநாதர் கோவில் வளாகத்தில், சங்ககிரி எம்.எல்.ஏ., ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ., கண்ணையன் ஆகியோர், இருதரப்பிடையே சமரசம் ஏற்படுத்த, ஆலோசனை நடத்தினர். அதில், 'கோவில் பண்டிகை முடிந்த பின், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பேசி முடிவெடுக்கலாம்' என, ராஜா தெரிவித்தார். பிரச்னையை பேசி முடித்த பின், பண்டிகையை கொண்டாடலாம் என, கண்ணையன் தெரிவித்தார். இக்கூட்டத்தில், ஒரு தரப்பினர் பங்கேற்கவில்லை. இதுகுறித்து, ராஜா கூறுகையில், ''தற்செயலாக நடந்த பிரச்னை. அமைதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். கோவிலில் பூஜை நடக்கிறது. ஓரிரு நாளில், பிரச்னைக்கு தீர்வு காணப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suresh N - Tharamangallam,இந்தியா
12-பிப்-202012:35:03 IST Report Abuse
Suresh N அடேய் கரடி குட்டி உன்னைய கோயிலுக்குள்ளே விட்டதே தப்பு...நீ எங்களுக்கு பஞ்சாயத்து பண்றயா..ஒன்னு தெரிஞ்சிக்கோ கோயில் எங்க பாட்டன் கெட்டி முதலியோடது, வரலாறு தெரியும்ல ..சிவன் சொத்து குல நாசம் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X