பொது செய்தி

தமிழ்நாடு

2021ல் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி: கால்நடைத்துறை அமைச்சர் ஆரூடம்

Added : பிப் 12, 2020
Advertisement

தலைவாசல்: ''வரும், 2021ல், பழனிசாமி தலைமையில், மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமையும்,'' என, கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேசினார்.
சேலம் மாவட்டம், தலைவாசல், கூட்டுரோட்டில், சர்வதேச தரத்தில், ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா, கால்நடை மருத்துவ கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றுக்கு, தமிழக முதல்வர் பழனிசாமி, கடந்த, 9ல் அடிக்கல் நாட்டினார். அத்துடன், விவசாய பெருவிழா, கருத்தரங்கு, கண்காட்சியை தொடங்கிவைத்தார். மூன்று நாளாக நடந்த நிகழ்ச்சியில், நிறைவு விழா நேற்று நடந்தது. அதில், வேளாண் துறை அமைச்சர் துரைகண்ணு பேசியதாவது: இந்தியாவே திரும்பி பார்க்கும்படி, 1,000 கோடி ரூபாயில், ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா அமையவுள்ளது. கண்காட்சியில், கால்நடை, பல்வேறு துறை சார்ந்த, மக்களுக்கு பயனான தகவல்கள், பயிர் சார்ந்த தொழில், விவசாயிகளின் கண்டுபிடிப்புகள் இடம்பெற்றிருந்தன. டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த, முதல்வருக்கு லட்சக்கணக்கான விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது: இந்த ஆட்சி என்ன செய்தது என, எதிர்க்கட்சியினர் கேட்கின்றனர். தற்போது, தெற்காசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்காவை, இந்த ஆட்சிதான் கொண்டுவரவுள்ளது. நடப்பாண்டே, கால்நடை மருத்துவ கல்லூரி தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மூன்று நாளாக நடந்த கண்காட்சியை, ஆறு லட்சம் பேர் பார்வையிட்டனர். கால்நடை பூங்கா அமைய காரணமாக இருந்த முதல்வருக்கு நன்றி. வரும், 2021ல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று, பழனிசாமி தலைமையில், மீண்டும், ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X