பொது செய்தி

தமிழ்நாடு

தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தநாள் கொண்டாட்டம்

Added : பிப் 12, 2020
Advertisement

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே, கடம்பூர் அரசு தொடக்கப்பள்ளியில், மின்விளக்கின் தந்தை தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தநாள் விழா, நேற்று கொண்டாடப்பட்டது. அதில், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், எடிசனின் படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். தலைமையாசிரியர் செல்வம் பேசுகையில், ''அமெரிக்கா, ஒஹயோ மாநிலம், மிலான் நகரில், 1847, பிப்., 11ல், எடிசன் பிறந்தார். அவர், ஒளி விளக்கு, ஒலி வரைவி, திரைப்பட கருவி போன்ற, 1,300 கருவிகளை கண்டுபிடித்து, 1,093 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றார்,'' என்றார். தொடர்ந்து, எடிசன் குறித்து, தகவல் தொகுத்துக்கூறும் போட்டி நடத்தி, சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X