பொது செய்தி

தமிழ்நாடு

350 மெட்ரிக் டன் துவரை கொள்முதல்: விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு

Added : பிப் 12, 2020
Advertisement

சேலம்: நடப்பாண்டு, 350 மெட்ரிக் டன் துவரை, ஆதார விலை கொள்முதலுக்கு, விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சேலம் கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்தில் நடப்பாண்டு, 350 மெட்ரிக் டன் துவரை கொள்முதல் செய்யப்பட உள்ளது. அதற்காக, சேலம், மேச்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், முதன்மை கொள்முதல் முகமைகள் செயல்படும். கிலோ துவரை, 58 ரூபாய் வீதம், வரும் ஏப்., 22 வரை கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ?ஹக்டேருக்கு அதிகபட்சம், 997 கிலோ வீதம், விவசாயிகள் வழங்கலாம். அதற்கான கிரயத்தொகை, விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். கொள்முதல் துவரையில், இதர பொருள் கலப்பு, 2 சதவீதம், இதர தானிய கலப்பு, முதிர்வடையாத சுருங்கிய பருப்பு, சேதமடைந்த பருப்பு ஆகியவை, 3 சதவீதம், சிறிதளவு சேதமானது, 4 சதவீதம், ஈரப்பதம், 12 சதவீதம் என்ற அளவில், சராசரி தரத்தை கொண்டிருக்க வேண்டும். இத்திட்டத்தில், விவசாயிகள் பயன்பெற, சிட்டா, அடங்கல் ஆதார், வங்கி கணக்கு புத்தக நகல் கொண்டு வர வேண்டும். தகவலுக்கு, 98947 - 76675, 90803 - 23535 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். துவரை சாகுபடி விவசாயிகள், வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X