பொது செய்தி

தமிழ்நாடு

புதிய ரக மரவள்ளி விதை குச்சி இலவசமாக வழங்க கோரிக்கை

Added : பிப் 12, 2020
Advertisement

பனமரத்துப்பட்டி: புது ரக மரவள்ளி விதை குச்சியை, இலவசமாக வழங்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், மரவள்ளி சாகுபடி செய்து, விவசாயிகள் கணிசமான வருவாய் ஈட்டி வருகின்றனர். திருவனந்தபுரத்திலுள்ள, மத்திய கிழங்கு வகை பயிர்கள் ஆராய்ச்சி நிலையம், 'பவித்ரா' எனும் புதிய வீரிய ரக மரவள்ளி வெளியிட்டுள்ளது. அந்த மரவள்ளி, பனமரத்துப்பட்டியில், சோதனைக்கு நடவு செய்யப்பட்டது. ஒரு குச்சியில், 50 கிலோவுக்கு மேல் விளைச்சல் கிடைத்தது. அதனால், அந்த ரக விதை குச்சிகளை, சேகோசர்வ் மூலம், இலவசமாக வழங்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, சேலம் சேகோசர்வ் சேர்மன் தமிழ்மணி கூறியதாவது: முதல்வர், சேகோசர்வ் நிர்வாகத்திடம் விவசாயிகள் மனு அளிக்க வேண்டும். அப்போது, முதல்வரின் அனுமதி பெற்று, மத்திய கிழங்கு வகை பயிர் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து, புது ரக மரவள்ளி விதை குச்சியை வாங்கி, விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X