ஏரியில் கோழிக்கழிவு நாற்றத்தால் மக்கள் அவதி

Added : பிப் 12, 2020
Advertisement

இடைப்பாடி: எருமப்பட்டி ஏரியில், கோழிக்கழிவுகள் அதிகளவில் கொட்டப்படுவதால், கொங்கணாபுரம் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். கொங்கணாபுரம் அருகே உள்ளது எருமப்பட்டி ஏரி. இதையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கொங்கணாபுரம், எருமப்பட்டி, வைகுந்தம் பிரிவு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, கோழிக்கறி கடைகளில் வரும் கழிவுகளை எருமப்பட்டி ஏரியில் கொட்டுகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, அதிலிருந்து வெளியேறும் கிருமிகள், அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு செல்வதால், மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, எருமப்பட்டி ஏரியில் கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X