சிதம்பரத்தை வெளுத்து வாங்கிய பிரணாப் மகள்| Dinamalar

சிதம்பரத்தை வெளுத்து வாங்கிய பிரணாப் மகள்

Updated : பிப் 12, 2020 | Added : பிப் 12, 2020 | கருத்துகள் (115)
Share
புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி பெற்ற வெற்றியை கொண்டாடிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை, கடுமையாக விமர்சித்துள்ளார் மகிளா காங்., தலைவியும், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகளுமான ஷர்மிஸ்தா முகர்ஜி.டில்லி சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் 62 இடங்களை கைப்பற்றி, ஆம்ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. பா.ஜ., 8 இடங்களை கைப்பற்றிய

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி பெற்ற வெற்றியை கொண்டாடிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை, கடுமையாக விமர்சித்துள்ளார் மகிளா காங்., தலைவியும், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகளுமான ஷர்மிஸ்தா முகர்ஜி.



latest tamil news



டில்லி சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் 62 இடங்களை கைப்பற்றி, ஆம்ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. பா.ஜ., 8 இடங்களை கைப்பற்றிய நிலையில், இம்முறையும் காங்., ஒரு இடம் கூட பெறாமல் படுதோல்வி அடைந்தது. அத்துடன் 63 தொகுதிகளில் காங்., வேட்பாளர் டெபாசிட் இழந்துள்ளனர்.

இந்நிலையில் டில்லி தேர்தல் முடிவுகள் குறித்து சிதம்பரம் நேற்று வெளியிட்ட டுவீட்டில், ஆம்ஆத்மி வென்றதன் மூலம், மூர்க்கத்தனம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளையும் சேர்ந்த டில்லி மக்கள், பிரிவினை, ஆபத்தான திட்டங்கள் கொண்ட பா.ஜ.,வுக்கு பெரிய தோல்வியை கொடுத்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் காங்., பெற்ற தோல்வி பற்றி ஏதும் குறிப்பிடவில்லை.


latest tamil news


இந்நிலையில் சிதம்பரத்தின் இந்த டுவீட்டிற்கு பதிலளித்துள்ள டில்லி மகிளா காங்., தலைவி ஷர்மிஸ்தா முகர்ஜி, உங்கள் மீதுள்ள மதிப்பு காரணமாக ஒன்றை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். பா.ஜ., முதல் மாநில கட்சிகள் வரை தோற்கடிக்க வேண்டும் என்ற பணியை சிறப்பாக செய்து விட்டீர்களா? இல்லை என்றால், நமது படுதோல்வி பற்றி அக்கறை கொள்ளாமல் எதற்காக ஆம்ஆத்மியின் வெற்றிக்காக சந்தோஷப்படவோ, அதை கொண்டாடவோ வேண்டும்? அது உண்மை என்றால் வாயை மூடி அமைதியாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆம்ஆத்மியின் வெற்றியை சிதம்பரம் புகழ்ந்து பேசியது காங்., கட்சிக்குள் பலரின் எதிர்ப்பையும் பெற்றுள்ளது. இதனால் டில்லி தேர்தலுக்கு காங்., கட்சிக்குள் மோதலும், சலசலப்பும், அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X