113 விலங்கினங்களுக்கு உடனடி உதவி தேவை; காக்க முன்வருமா ஆஸ்திரேலிய அரசு?

Updated : பிப் 12, 2020 | Added : பிப் 12, 2020
Advertisement

மெல்போர்ன்: 'ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால், இருப்பிடத்தை இழந்து தவிக்கும், 113 விலங்கினங்களின் பாதுகாப்புக்கு உடனடி உதவி தேவை' என, விலங்கியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.





ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால், நுாற்றுக் கணக்கான விலங்கினங்களும், அவற்றின் இருப்பிடமும் அழிந்துள்ளன.காட்டுத் தீ கட்டுக்குள் வந்த பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்ட விலங்கியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாவது:




காட்டுத்தீயால், 100 கோடி விலங்குகள் வரை அழிந்திருக்கலாம். தீக் காயங்களுடன் உயிர் தப்பியுள்ள சில விலங்குகள், ஏறக்குறையத் தங்களின் இருப்பிடத்தை முற்றிலுமாக இழந்துள்ளன. 113 விலங்கினங்களுக்கு மருத்துவம் மற்றும் பாதுகாப்பான இருப்பிட வசதியும் உடனடியாகக் கிடைக்காவிட்டால் அவை முற்றிலும் அழிந்துவிடும் நிலையில் உள்ளன.காட்டுத்தீ ஏற்பட்ட இன்னும் பல பகுதிகளுக்குள் சென்று கள ஆய்வு செய்ய முடியவில்லை. அங்கும் ஆய்வு செய்தால் மட்டுமே, முழுமையான தகவல்கள் தெரியவரும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.




இதை முற்றிலுமாக ஏற்க மறுக்கும் ஆஸ்திரேலிய அரசு, 'காட்டுத் தீயால், எந்த விலங்கினமும் முற்றிலும் அழிந்துவிடவில்லை. ஆனால், 30 சதவீதம் அளவிற்கு விலங்குகள் தங்கள் இருப்பிடங்களை இழந்துள்ளன. உடனடியாக உதவி தேவைப்படும் விலங்கினங்களுக்கு உதவும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது' எனத் தெரிவித்துள்ளது.காட்டுத்தீ ஏற்பட்டவுடன், வெப்பமயமாதலைத் தடுப்பதாகக் கூறி, ஆயிரக்கணக்கான ஒட்டகங்களைச் சுட்டு வீழ்த்திய ஆஸ்திரேலிய அரசு, தீக் காயத்துடன் இருப்பிடங்களை இழந்து தவிக்கும் வன விலங்குகளுக்கு உதவ முன்வருமா என்பது சந்தேகமே.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X