அகதிகள் படகு கடலில் கவிழ்ந்தது 16 பேர் பலி| Dinamalar

அகதிகள் படகு கடலில் கவிழ்ந்தது 16 பேர் பலி

Added : பிப் 12, 2020
Share

டாக்கா : வங்கதேசத்தில் இருந்து மலேசியாவிற்கு, அகதிகளுடன் சென்ற படகு, நடுக்கடலில் கவிழ்ந்ததில், 14 பெண்கள், ஒரு குழந்தை உள்ளிட்ட, 16 பேர் பலியாகினர்.

தென்கிழக்காசிய நாடான மியான்மரில், ராணுவத்தின் அதிரடி நடவடிக்கைகளால், 2017லிலிருந்து ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட 'ரோஹிங்கியா' முஸ்லிம்கள், மியான்மரில் இருந்து வங்கதேசத்திற்கு தப்பிச் சென்றனர்.வங்க தேசத்தில் தங்கியுள்ள அகதிகளிடம், வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வதாக கூறி, சட்டவிரோதமாக படகுகளில் ஏற்றிச் செல்லும் நடவடிக்கையில், சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் சிலர், அந்நாட்டு கடலோர காவல்படையினரிடம் சிக்குகின்றனர்.

இதுபோல் மலேசிய நாட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி, 125 ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு, நேற்று அதிகாலை நேரத்தில், வங்க கடலில் கவிழ்ந்தது.இந்த விபத்தில், 14 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 16 பேர் கடலில் மூழ்கி இறந்ததாகவும். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளதாவும் வங்கதேச அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த சம்பவம் குறித்து, கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர் இக்பால் ஹூசைன் கூறியதாவது:அளவுக்கதிமாக அகதிகள் ஏற்றப்பட்டதுடன், சரக்குகளையும் அதிக அளவில் எடுத்து சென்றதால், படகு கவிழ்ந்திருக்கலாம் என, தெரிகிறது. விபத்தில் மீட்கப்பட்டவர்களின் உடல்கள், ஷா போரிர் தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள், தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

படகில், 62 பேர் உயிருடன் இருப்பதாக கூறப்படும் நிலையில், விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை உறுதியாக தெரியவில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X