அதிகாரிகள் கவனத்திற்கு - தர்மபுரி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - தர்மபுரி

Added : பிப் 12, 2020
Share

சமுதாய கூடத்தின் பூட்டை திறக்கணும்: கடத்தூர் அடுத்த தாளநத்தத்தில் கடந்த, 2013 - 14ல், 17 லட்சம் ரூபாய் மதிப்பில், சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. இதன் அருகில், 16.46 லட்சம் ரூபாய் மதிப்பில், உணவுக்கூடம் மற்றும் குளியலறை கட்டப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் பூட்டியுள்ளது. இப்பகுதி மக்கள் திருமணம், காதணி விழா உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளை நடத்த வசதியாக, பூட்டியுள்ள சமுதாயக்கூடத்தை திறக்க வேண்டும்.
தண்ணீர் தொட்டி இருந்தும் இல்லை: தர்மபுரி அடுத்த, செம்மாண்டகுப்பம் பஞ்., போதாளன்கொட்டாயில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, ஆறு ஆண்டுகளுக்கு முன், பஞ்., நிர்வாகம் சார்பில், சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. இதில், சில மாதங்கள் மட்டுமே தண்ணீர் வந்தது. இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், தொட்டியில் தண்ணீர் வராமல் உள்ளது. இதன் போர்வெல்லை ஆழப்படுத்தி, இதில், தண்ணீர் வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேவை மைய கட்டடம் வீண்: அரூர் அடுத்த கே.வேட்ரப்பட்டி பஞ்.,ல், பட்டா, சிட்டா, ஜாதிச்சான்று, அ.பதிவேடு உள்ளிட்ட, சான்றுகளை பொதுமக்களும், விவசாயிகளும் எளிதாக பெறும் வகையில், 13.12 லட்சம் ரூபாய் மதிப்பில், கிராம சேவை மையக் கட்டடம் கட்டப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும், திறக்கப்படாமல் உள்ளதால், சான்றுகள் பெறுவதற்கு, பொதுமக்கள் அரூர் செல்கின்றனர். எனவே, சேவை மைய கட்டடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X