பொது செய்தி

தமிழ்நாடு

பென்னாகரத்தில் பொதுநிதி மேலாண்மை விளக்க கூட்டம்

Added : பிப் 12, 2020
Advertisement

பென்னாகரம்: பென்னாகரம் மற்றும் ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, 33 ஊராட்சி மன்றத்தலைவர், துணைத்தலைவர் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கான பொதுநிதி மேலாண்மை விளக்க கூட்டம் நடந்தது. பென்னாகரம் ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்துக்கு ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் சீனிவாச சேகர் தலைமை வகித்தார். பி.டி.ஓ., கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி வரவு செலவு கணக்குகளை கணினியில் பதிவு செய்து, ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டன. துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, பழனி, குமரேசன், கல்பனா மணிவேலன், மாவட்ட கவுன்சிலர் குட்டி மற்றும், 33 ஊராட்சிகளை சேர்ந்த, தலைவர் துணைத்தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X