சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டில் ஏற்பட்ட தீயில் பொருட்கள் எரிந்து நாசம்

Added : பிப் 12, 2020
Advertisement

அரூர்: அரூரில், ஓட்டு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், பீரோ, கட்டில் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாகின. தர்மபுரி மாவட்டம், அரூர் ஆத்தோர வீதியை சேர்ந்தவர் கார்த்திக், 32. ஜவுளி வியாபாரி; இவரது மனைவி ஆனந்தலட்சுமி, 25. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு, 7:45 மணிக்கு, மின்கசிவால் கார்த்திக்கின் ஓட்டு வீட்டில், திடீரென தீப்பிடித்தது. மளமளவென பரவிய தீ, கொளுந்து விட்டு எரிந்ததில், வீட்டிலிருந்த துணிமணிகள், பீரோ, கட்டில், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவைகள் எரிந்து நாசமாகின. தகவலின்படி வந்த, அரூர் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் பழனிசாமி தலைமையிலான வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர். இது குறித்து, அரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். நேற்று அரூர் எம்.எல்.ஏ., சம்பத்குமார், சப் - கலெக்டர் பிரதாப், அரசு வக்கீல் பசுபதி ஆகியோர், கார்த்திக் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன், நிவாரண பொருட்களையும் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X