புதுப்பிக்கப்பட்ட சாலையில் எச்சரிக்கை பலகை தேவை

Added : பிப் 12, 2020
Advertisement

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பெல்ரம்பட்டியில், புதுப்பிக்கப்பட்ட சாலை வளைவுகளில் எச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பெல்ரம்பட்டி கூட்ரோட்டில் இருந்து, அமானிமல்லாபுரம் வரை, 5 கி.மீ., தூரத்துக்கு தார்ச்சாலை உள்ளது. இது, பல ஆண்டுகளாக சேதமான நிலையில் இருந்தது. இந்நிலையில், ஒருமாதத்துக்கு முன், இச்சாலை புதுப்பிக்கப்பட்டது. இதில், அமானிமல்லாபுரம் கூட்டுரோடு, பெல்ரம்பட்டி கூட்டுரோடு, வட்டகானம்பட்டி மூன்றுரோடு பிரிவு சாலை ஆகிய பகுதிகளில், ஆபத்தான வளைவுகள் உள்ளன. இவ்விடங்களில், வளைவு குறித்து, எச்சரிக்கை பலகை வைக்கவில்லை. இதனால், இவ்வழியாக இரவில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், அவதிப்படுகின்றனர். மேலும், இந்த வளைவுகளில் வாகனங்களின் வேகத்தை கட்டுபடுத்த, வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. இவற்றிக்கு வண்ணம் பூசாமலும், ரிப்லெக்டர் ஒளி உமிழும் தகட்டை பொருத்தாமலும் உள்ளனர். இதனால், சாலையில் வளைவு மற்றும் வேகத்தடைகள் எங்குள்ளது என தெரியாமல், வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். மேலும், இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஆபத்தான வளைவு மற்றும் வேகத்தடைகளில், எச்சரிக்கை பலகை மற்றும் ரிப்லெக்டர் ஒளி உமிழும் தகடுகளை பதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X