குடியிருப்பு பகுதியில் சாலையோரம் குப்பையை எரிப்பதால் மக்கள் அவதி

Added : பிப் 12, 2020
Advertisement

தர்மபுரி: தர்மபுரி அடுத்த, வெண்ணாம்பட்டி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில், சாலையோரத்தில் குப்பையை கொட்டி எரிப்பதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில், 251 பஞ்.,கள் உள்ளன. இவற்றில் மிகப்பெரியது இலக்கியம்பட்டி பஞ்சாயத்து. இதில், தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய குடியிருப்பு, வெண்ணாம்பட்டி, வி.ஜெட்டிஹள்ளி, வேப்பமரத்து கொட்டாய், குள்ளனூர், அண்ணா நகர், பிடமனேரி, செந்தில்நகர், இ.பி.,காலனி., நியூ காலனி, கருவூல காலனி, அதியமான் நகர், ஆசிரியர் காலனி உள்ளிட்ட, 27 கிராமங்கள் உள்ளன. இந்த பஞ்சாயத்துகளில் போதிய குப்பை தொட்டிகள் வைக்கவில்லை. இதனால், மக்கள் தங்களது வீடுகளில் சேகரிக்கும் குப்பையை, சாலையில் கொட்டிவிட்டு செல்கின்றனர். குப்பை தொட்டிகள் இருந்தாலும், இதில் சேரும் குப்பையை இப்பஞ்., ஊழியர்கள் முறையாக அள்ளுவதில்லை. சில இடங்களில் உள்ள குப்பை தொட்டியில் சேகரிக்கும் குப்பையை, சில துப்புரவு ஊழியர்கள் தீயிட்டு எரிக்கின்றனர். குறிப்பாக, இலக்கியம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட வெண்ணாம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், பல இடங்களில், சில துப்புரவு பணியாளர்கள் குப்பையை தீயிட்டு எரிக்கின்றனர். இதனால், வீதி முழுவதும் புகை மூட்டமாகி, பொதுமக்களுக்கு மூச்சுதிணறல் ஏற்படுகிறது. இதனால், இப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன்கருதி, குப்பையை தீயிட்டு எரிப்பதை தடுக்க, பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X