பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கிருஷ்ணகிரி

Added : பிப் 12, 2020
Advertisement

பயனின்றி உள்ள ஊரக நூலகம்: காவேரிப்பட்டணம் ஒன்றியம், பையூரில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கடந்த, 2010ல், ஊரக நூலகம் கட்டப்பட்டது. ஆனால், கடந்த ஏழு ஆண்டுகளாக பயன்பாடின்றி இந்நூலகம் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால், இதனுள் இருந்த புத்தகங்கள் அனைத்தும் வீணாகி வருவதோடு, இப்பகுதியிலுள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் சிரமப்படுகின்றனர். எனவே, இந்நூலகத்தை பராமரித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
வீதியில் கழிவுநீர்; அவதியில் மக்கள்: செக்கோடியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, போதிய சாக்கடை கால்வாய் இல்லை. இங்குள்ள பல வீதிகளில், குடியிருப்புகளுக்கு முன் சாக்கடை கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதில் துர்நாற்றம் வீசி, அதிகளவில் கொசு உற்பத்தியும் ஆகிறது. இதனால், மக்கள், மர்ம காய்ச்சலால் அடிக்கடி பாதிக்கப்படுகின்றனர். இவர்களின் நலன்கருதி, செக்கோடியில் சாக்கடை கால்வாய் அமைக்க நடவடிக்கை வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X