பொது செய்தி

தமிழ்நாடு

புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

Added : பிப் 12, 2020
Advertisement

ஓசூர்: ஓசூரில், புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஓசூரில், உலக புற்றுநோய் தினத்தையொட்டி, நேற்று காலை விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஓசூர், சப் - கலெக்டர் அலுவலகத்தில் இருந்து துவங்கிய பேரணியை, ஆர்.டி.ஓ., குமரேசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். தேன்கனிக்கோட்டை சாலை, ரிங்ரோடு, சப் - ஜெயில் சாலை, பழைய தொலைபேசி அலுவலக சாலை வழியாக சென்ற பேரணி, மருத்துவமனை முன் முடிவடைந்தது. பேரணியில் பங்கேற்ற அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க தேவையான வழிமுறைகள், ஆரம்ப நிலையில் கண்டறிந்தால், செய்ய வேண்டிய சிகிச்சைகள், புற்றுநோய் ஏற்பட காரணம் குறித்த பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். டாக்டர்கள் அரவிந்தன், நாகேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X