கலெக்டர் அலுவலகத்தில் பட்டா கேட்டு மக்கள் மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் அலுவலகத்தில் பட்டா கேட்டு மக்கள் மனு

Added : பிப் 12, 2020
Share

கிருஷ்ணகிரி: பூதிமுட்லு பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: வேப்பனஹள்ளி ஒன்றியம் பூதிமுட்லு கிராமம், எம்.ஜி.ஆர்., நகரில், ஊர்நத்தம் இடத்தில், 60 வீட்டுமனைகள் உள்ளன. இதில், 12 வீட்டுமனைகளுக்கு மட்டும் கடந்த பத்து ஆண்டிற்கு முன், பட்டா வழங்கப்பட்டன. மீதமுள்ள வீட்டுமனைகளுக்கு பட்டா கேட்டு பலமுறை முறையிட்டும் கடந்த, 2019 செப்.,ல் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. பட்டா இல்லாமல் உள்ள, 48 குடும்பத்தினருக்கு, பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X