கிராம தேவதைகளுக்கு பண்டிகை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிராம தேவதைகளுக்கு பண்டிகை

Added : பிப் 12, 2020
Share

ஓசூர்: ஓசூர் அருகே, கிராம தேவதைகளுக்கு நடந்த பண்டிகையில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஓசூர் அடுத்த, எம்.காரப்பள்ளி கிராமத்தில், கிராம தேவதைகளான சென்றாய சுவாமி, சப்பளம்மா தேவி, பல்லக்கியம்மா, மாரியம்மா, கங்கம்மாகோவில்கள் உள்ளன. 100 ஆண்டுகள் பழமையான இக்கோவில்களில், ஆண்டுதோறும் ஊர் பண்டிகை நடத்தப்பட்டு, உற்சவமூர்த்திகள் திருவீதி உலா செல்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஊர் பண்டிகை நேற்று நடந்தது. உற்சவ மூர்த்திகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. விவசாயிகள் தங்களது மாடுகளை கோவில்களுக்கு அழைத்துச்சென்று, சிறப்பு பூஜைகள் செய்தனர். பெண்கள் பலர், பூஜை பொருட்களை கையில் ஏந்தி, கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். விழாவில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X