பொது செய்தி

தமிழ்நாடு

பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் தவணை தொகை பெற அழைப்பு

Added : பிப் 12, 2020
Advertisement

கிருஷ்ணகிரி: பிரதம மந்திரியின், கிசான் சம்மான் திட்டத்தில், நான்காம் தவணை தொகையை, விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம் என, கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் கடந்த, 2018 ஜன., முதல் செயல்படுகிறது. இதில், விவசாயிகள் பயிர் சாகுபடிக்கு தேவையான இடு பொருட்களை கொள்முதல் செய்ய, உதவித்தொகையாக, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை, 2,000 ரூபாய் என, ஆண்டுக்கு, 6,000 ரூபாய், மூன்று தவணையாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், 34 லட்சத்து, 41 ஆயிரம் விவசாயிகளுக்கு, மூன்று தவணைகளாக, 2,431 கோடியே, 59 லட்ச ரூபாய், அவர்களின் வங்கிக்கணக்கில், நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. தற்போது, நான்காம் தவணை பெற, ஆதார் அட்டையில் உள்ளவாறு மத்திய அரசு வலைதளத்தில் பெயர் இருக்க வேண்டும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே, இதுவரை மூன்று தவணைகள் பெற்று, நான்காம் தவணை பெறாத விவசாயிகள், தங்கள் அருகில் உள்ள பொதுச்சேவை மையத்தை அணுகி, ஆதார் அட்டையில் உள்ளவாறு, பெயரை மாற்றம் செய்து, தொகையை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X