சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓசூர் அருகே இருவர் கொலையில் மேலும் 4 பேருக்கு 'குண்டாஸ்'

Added : பிப் 12, 2020
Advertisement

ஓசூர்: ஓசூர் அருகே, தொழிலதிபரின் மனைவி மற்றும் கார் டிரைவரை கொன்ற வழக்கில், மேலும் நான்கு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மஹாலட்சுமி நகரை சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த்பாபு மனைவி நீலிம்மா, 42. இவர், கடந்த நவ.,11ல், ராயக்கோட்டை சாலையில் உள்ள சானமாவு அருகே, காரில் சென்றபோது, டிப்பர் லாரி ஒன்று, கார் மீது மோதியது. அப்போது, மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதில், காரிலிருந்த நீலிம்மா மற்றும் டிரைவர் முரளி கொல்லப்பட்டனர். உத்தனப்பள்ளி போலீசார் விசாரணையில், ஆனந்த்பாபுவின் அக்கா கணவரான தொழிலதிபர் ராமமூர்த்தி, தொழில் போட்டியால், மதுரையை சேர்ந்த கூலிப்படை உதவியுடன் இதை, அரங்கேற்றியது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக, 13 பேரை போலீசார் கைது செய்தனர். முதல் குற்றவாளியான தொழிலதிபர் ராமமூர்த்தி தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். இக்கொலையில் தொடர்புடைய மஞ்சுநாத், ஆனந்த், ராமு, கோபால் ஆகியோர், ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டாவது குற்றவாளியான, மதுரை காளிமுத்து நகரை சேர்ந்த, வக்கீல் வெங்கட்ராமன், 36, கருப்பாயூரணியை சேர்ந்த அசோக், 40, மேல் பொன்நகரத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன், 29, காமன்தொட்டியை சேர்ந்த முருகப்பா, 51 ஆகிய நான்கு பேரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட எஸ்.பி., பண்டிகங்காதர் பரிந்துரை செய்தார். அதையேற்று, நான்கு பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட கலெக்டர் பிரபாகர் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல், சேலம் மத்திய சிறையில் உள்ள அவர்களிடம், நேற்று வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X