பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி இடைநிற்றல் அதிகரிப்பு: கலெக்டர் அலுவலகத்தில் மனு

Added : பிப் 12, 2020
Advertisement

கரூர்: 'அரசு மேல்நிலைப் பள்ளியில் இடைநிற்றல் அதிகரித்து வருவதை விசாரிக்க வேண்டும்' என, கலெக்டர் அலுவலகத்தில் பொரணி கிராம மக்கள் சார்பில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம், பொரணி அரசு உயர்நிலைப்பள்ளி, இரண்டு ஆண்டுகளுக்கு முன் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. கிராமப்புற, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவியர் பலர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில், மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்து வருகிறது. பள்ளியில் கழிவறை பராமரிப்பின்றி உள்ளது. குடிநீரும் சரிவர வினியோகம் இல்லை. இது குறித்து, பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X