பொது செய்தி

தமிழ்நாடு

லாப நோக்கில் '108' ஆம்புலன்ஸ் நிர்வாகம்: கலெக்டரிடம் உரிமை பாதுகாப்பு சங்கம் மனு

Added : பிப் 12, 2020
Advertisement

கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில், '108' ஆம்புலன்ஸ் திட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனு விபரம்: மாவட்டத்தில், '108' ஆம்புலன்ஸ் சேவை கடந்த சில மாதங்களாக உரிய முறையில் சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு கிடைப்பது பிரச்னையாக இருந்துள்ளது. இதை விசாரிக்கும்போது வாகன குறைபாடுகளால் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதும் கண் கூடாக தெரிகிறது. தமிழக அரசிடம் இருந்து அனைத்து செலவினத்திற்கும் பணத்தை பெற்றுக்கொண்டு வாகனத்தை முறையாக பராமரிக்காமல், லாபநோக்கத்திற்காக அதிகாரிகள் செயல்பட்டது தெரிய வந்துள்ளது. வாகனம் பராமரிப்பு இன்மையால் பழுதாகி நிற்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதனால், பலர் உயிரிழந்து விடுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. மக்களின் உயிர்காக்கும் சேவையை பராமரிக்காமல் அலட்சியமாக இருந்து உயிரிழப்பிற்கு காரணமான, மாவட்ட அதிகாரிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X