பொது செய்தி

தமிழ்நாடு

புறவழிச்சாலை அரளிப்பூ செடிகளை சீரமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்

Added : பிப் 12, 2020
Advertisement

கரூர்: கரூர்-சேலம், திண்டுக்கல் புறவழிச்சாலையில் நடுப்பகுதியில் வளர்ந்துள்ள அரளிப்பூ உள்ளிட்ட செடிகளால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால், எதிரே வரும் வாகனங்கள் தெரியும் வகையில் செடிகளை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர்-சேலம் மற்றும் மதுரை புறவழிச்சாலை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், புறவழிச்சாலை நடுப்பகுதியில் நடப்பட்ட அரளிப்பூ உள்ளிட்ட பல்வேறு செடிகள் உயரமாக வளர்ந்துள்ளன. இதனால், எதிரே வரும் வாகனங்கள் சரிவர தெரியாமல், வளைவுகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, சாலையில் வளர்ந்துள்ள செடிகளை சாப்பிட ஆடு, மாடுகள் அதிகளவில் வருகின்றன. அப்போது திடீரென ஆடு, மாடுகள் குறுக்கே ஓடுவதால், வேகமாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கி பலர் படுகாயமடைகின்றனர். மேலும், காலை மற்றும் மாலை நேரங்களில், அரளிப்பூக்களை உள்ளூரைச் சேர்ந்த சிலர் பறிக்கும் வேலையில் ஈடுபடுகின்றனர். அப்போது, வாகனங்களில் சிக்கி பூ பறிக்க வரும் பொது மக்களும் விபத்தில் சிக்குகின்றனர். அதிகளவில் செடிகள் வளர்ந்து இருப்பதால், எதிரே வரும் வாகனங்கள் சரிவர தெரியாமல், விபத்து ஏற்பட்டு பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், கரூர்-சேலம் புறவழிச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தில், செடிகள் எதுவும் இல்லாத நிலையில், எதிரே வரும் வாகனங்கள் தெள்ளத் தெளிவாக தெரியும் வகையில் உள்ளது. எனவே, பைபாஸ் சாலையின், நடுப்பகுதியில் உள்ள, அரளிப்பூ உள்ளிட்ட செடிகளின் அளவை சிறிது குறைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X