அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்

Added : பிப் 12, 2020
Share
வேகத்தடையில் விபத்து அச்சம்: கரூர், லைட்ஹவுஸ் கார்னர் சாலையில் பல இடங்களில், போக்குவரத்து வேகத்தை கட்டுப்படுத்த வேகத்தடை போடப்பட்டுள்ளது. ஆனால், இரவு நேரத்தில் அது இருப்பதை அறிந்து கொள்ள, அதில் வெள்ளை கோடு வரையப்படவில்லை. இதனால், டூவிலர்களில் செல்கிறவர்கள் தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைகின்றனர். நகராட்சி குமரன் உயர்நிலைப்பள்ளி சாலையில், வேகத்தடையில் உடனடியாக,

வேகத்தடையில் விபத்து அச்சம்: கரூர், லைட்ஹவுஸ் கார்னர் சாலையில் பல இடங்களில், போக்குவரத்து வேகத்தை கட்டுப்படுத்த வேகத்தடை போடப்பட்டுள்ளது. ஆனால், இரவு நேரத்தில் அது இருப்பதை அறிந்து கொள்ள, அதில் வெள்ளை கோடு வரையப்படவில்லை. இதனால், டூவிலர்களில் செல்கிறவர்கள் தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைகின்றனர். நகராட்சி குமரன் உயர்நிலைப்பள்ளி சாலையில், வேகத்தடையில் உடனடியாக, வெள்ளை பெயின்ட் அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா? கரூர் அருகே, வெள்ளாப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் குடியிருப்புகள் அதிகளவில் உள்ளன. ஆனால், போதுமான சாக்கடை கழிவுநீர் செல்லும் வாய்க்கால்கள் இல்லை. ஏற்கனவே உள்ள சாக்கடை கால்வாயிலும் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை நாள் தோறும் சுத்தம் செய்வது இல்லை. இதனால், வெள்ளாளப்பட்டியில் சுகாதார சீர்கேடு மற்றும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. சாக்கடை கால்வாயை தூர் வாரி சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.

சேதமடைந்த சின்டெக்ஸ் தொட்டி: கரூர், எல்.சி.ஐ., காலனியில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக போர்வெல் அமைக்கப்பட்டு, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, சின்டெக்ஸ் தொட்டி சேதம் அடைந்துள்ளது. இதனால், பொது மக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். சிமென்ட் மேடையும் சேதமடைந்துள்ளது. போர்வெல் குழாயை சீரமைத்து, புதிய சின்டெக்ஸ் தொட்டியை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து, புகார் அளித்தும் பலனில்லை.

மின்கம்பம் சேதம்; மாற்ற வேண்டும்: கரூர், சுங்ககேட் பிரதான சாலையில், மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக இந்த மின் கம்பம் பழுதாகி, எந்நேரமும் கீழே விழும் நிலையில் உள்ளது. மேலும், மின் கம்பத்தை சுற்றி, செடிகள் படர்ந்துள்ளன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும், மின் வாரிய ஊழியர்கள் கண்டுகொள்ளவில்லை. மின்கம்பம், கீழே விழும் பட்சத்தில், பல வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது. கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும்.

குடிநீர் குழாய்கள் பாதுகாப்பு தேவை: கரூர், நகராட்சி பகுதியில், புதிய குடிநீர் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. அதற்காக, பல இடங்களில், புதிய ராட்சத குழாய்கள் போடப்பட்டுள்ளன. தற்போது, குழாய்கள் திறந்தவெளி மற்றும் பிளாட்பாரங்களில் போடப்பட்டுள்ளதால், உடையும் அபாயம் உள்ளது. சாலையில் உள்ள குழாய்களால், போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், புதிய குடிநீர் குழாய்களை, பாதுகாப்பான இடத்தில் வைக்க, கரூர் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X