சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேலை வாங்கித் தருவதாக பணமோசடி: கணவன், மனைவி மீது வழக்குப்பதிவு

Added : பிப் 12, 2020
Advertisement

கரூர்: தமிழக பால்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக, பண மோசடி செய்த கணவன், மனைவி உள்பட, நான்கு பேர் மீது, குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கரூர், வடக்கு காந்தி கிராமம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் டென்சிலின், 24; மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார். இவர், அதே பகுதியை சேர்ந்த சசிகுமார், அவரது மனைவி சாந்தி, நண்பர்கள் கார்த்திகேயன், முத்துசாமி ஆகியோரிடம், தமிழக பால்வள ஆராய்ச்சி நிறுவனத்தில், வேலைக்காக, எட்டு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாயை, 2018 அக்டோபர் மாதம் கொடுத்துள்ளார். ஆனால், சசிகுமார் உள்பட, நான்கு பேர் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள், வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இதனால், டென்சிலின் குற்றப் பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து, சசிகுமார் உள்ளிட்ட, நான்கு பேர் மீது, கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X