போதிய இடவசதியற்ற ஜி.ஹெச்., காத்திருப்பு அறை

Added : பிப் 12, 2020
Advertisement

கரூர்: கரூர் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவின் முன் சிறிய காத்திருக்கும் அறை அமைக்கப்பட்டுள்ளது. அதில், உட்கார போதிய இடம் இல்லாததால், நோயாளிகளின் உறவினர்கள் அவதிபடுகின்றனர். கரூர் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு, மத்திய அரசு நிதியுதவி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டது. தற்போது, அருகில் உள்ள கட்டடத்துக்கு அவசர சிகிச்சை பிரிவு மாற்றப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை பிரிவு வளாகத்தில், நோயாளிகளின் உறவினர்கள் காத்திருக்க, சிறிய அளவிலான காத்திருப்பு அறை அமைக்கப்பட்டது. ஆனால், அங்கு போதிய இடமில்லை. இதனால், அவரச சிகிச்சை பிரிவுக்கு வரும் நோயாளிகளின் உறவினர்கள், கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் காத்திருக்க வேண்டிய அவலம் உள்ளது. இரவு நேரத்தில், மருத்துவமனைக்கு எதிரே உள்ள கடைகளுக்கு முன், நோயாளிகளின் உறவினர்கள் படுத்து தூங்குகின்றனர். இதனால், நோயாளிகளின் உறவினர்கள் அமர வசதியாக, பெரிய அளவில் காத்திருக்கும் அறை அமைக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X