பண்ணையால் ஈக்கள் தொல்லை: தொற்றுநோய் பரவும் அபாயம்| Dinamalar

பண்ணையால் ஈக்கள் தொல்லை: தொற்றுநோய் பரவும் அபாயம்

Added : பிப் 12, 2020
Share

கரூர்: தனியார் கோழிப் பண்ணையிலிருந்து அதிகளவில் ஈக்கள் உருவாகி பல்வேறு கிராமத்திற்குள் செல்வதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. க.பரமத்தி ஒன்றியம், நடந்தையில் தனியாருக்கு சொந்தமான கோழிப்பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த பண்ணையில் சமீப காலமாக அதிகளவில் ஈக்கள் உருவாகியுள்ளன. இதனால், சுற்றுவட்டார கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். பல இன்னல்கள் ஏற்படுகின்றன. தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதுதொடர்பாக கடந்த ஓராண்டுக்கு முன்பே கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, 15 நாட்கள் கால அவகாசம் கேட்டு ஈக்களை கட்டுக்குள் வைத்திருந்தனர். மீண்டும், ஈக்கள் உருவாக ஆரம்பித்ததால், கடந்த, ஒரு மாதமாக ஈக்களால் பெரும் இன்னல்களுக்கு ஆளாவதாகவும், இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை; இனியாவது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும் என்பது மக்கள் கோரிக்கை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X