நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ஏலம் ரத்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ஏலம் ரத்து

Added : பிப் 12, 2020
Share

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஆர்.சி.எம்.எஸ்.,ல், செவ்வாய்கிழமை தோறும், மஞ்சள் ஏலம் நடந்து வருகிறது. ஜனவரி மாதம் மஞ்சள் சீசன் தொடங்கி, ஆகஸ்ட் வரை வரத்து அதிகம் இருக்கும். அதற்கு பிறகு வரத்து கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிடும். அப்போது, இருப்பு வைத்திருந்த மஞ்சள் விற்பனைக்கு வரும். ஆனால், இந்த வருடம் விலை குறைவாக இருந்ததால், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வரத்து மிகவும் குறைந்தது. நேற்று, வரத்து மிகவும் குறைவாக இருந்ததால் வழக்கம் போல் நடக்க இருந்த மஞ்சள் ஏலம் ரத்து செய்யப்பட்டது. ஆனால், தனியார் மண்டிகளில் ஏலம் நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X