பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் ஸ்டாண்டில் பழம் விற்பனை: ப. வேலூரில் 4 சிறுவர்கள் மீட்பு

Added : பிப் 12, 2020
Advertisement

நாமக்கல்: பஸ் ஸ்டாண்டில், பழம் விற்பனை செய்து கொண்டிருந்த, நான்கு சிறுவர்களை, கூட்டமைப்பினர் மீட்டு, குழந்தைகள் நலக்குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
காணாமல் போன சிறுவர்களை கண்டுபிடித்தல் மற்றும் குழந்தை தொழிலாளர்களை மீட்க வேண்டும் என்ற, மத்திய அரசின் புதிய திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது. அதற்காக, கலெக்டர் மெகராஜ் தலைமையில், தொழிலாளர் மற்றும் தொழிற்சாலை துறை, ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு, சைல்டு லைன் ஆகியவர்கள் அடங்கிய கூட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இம்மாதம், 1 முதல், வரும், 29 வரை, மாவட்டம் முழுவதும், பஸ் ஸ்டாண்ட், செங்கல் சூளை, ஸ்பின்னிங் மில், லாரி பட்டறை, ஒர்க்?ஷாப் உள்ளிட்ட இடங்களில், ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளை கண்டறிந்து, மீட்டு வருகின்றனர். நேற்று, தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் ஆண்டனி ஜெனித் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், ப.வேலூர் ஸ்டாண்டில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பழம் விற்பனை செய்து கொண்டிருந்த, நான்கு சிறுவர்கள் கண்டறியப்பட்டனர். அவர்களை மீட்டு விசாரணை செய்ததில், 14 வயதுக்கு கீழ், இரண்டு பேர், பத்தாம் வகுப்பில் இடைநின்றவர்கள், இரண்டு பேர் என, நான்கு பேர் மீட்கப்பட்டனர். அவர்கள், கலெக்டர் மெகராஜ் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அதில், ஒரு மாணவர், பத்தாம் வகுப்பு படித்து வருவது தெரிய வந்தது. அவரை, பள்ளிக்கு சென்று தொடர்ந்து படிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், மற்ற மூன்றுபேரையும், குழந்தைகள் நலக்குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X