பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்

Added : பிப் 12, 2020
Advertisement

திறந்தவெளியில் குப்பை குவிப்பு: பள்ளிபாளையம் ஒன்றியம், ஒட்டமெத்தை சாலையில் திறந்த வெளியில் தொடர்ந்து குப்பை, கழிவுகள் கொட்டப்படுகின்றன. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, அருகில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், அதிகளவு சேர்ந்தவுடன் தீ வைப்பதால், அருகில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைய வாய்ப்புள்ளது. புகையால் சாலையில் செல்லும் பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். இங்கு குப்பை கொட்ட தடை விதிக்க வேண்டும்.
நகராட்சி சாலையை சீரமைக்க கோரிக்கை: குமாரபாளையம், நகராட்சி அலுவலகம் அருகே பெருமளவிலான குடியிருப்புகள், கடைகள் உள்ளன. பவானி செல்லும் சாலை என்பதால் போக்குவரத்து மிகுந்திருக்கும். இங்கு, புதைவட மின் கம்பிகள் அமைக்க தோண்டப்பட்ட பள்ளம் பல நாட்களாக மூடப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் இந்த இடத்தில் நிலைதடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. இரவு நேரத்தில் இந்த பள்ளம் இருப்பதே தெரியாமல் இருந்து வருகிறது.

பாதுகாப்பற்ற சிறுபாலம்: பள்ளிபாளையம் ஒன்றியம், ஆவத்திபாளையம் அடுத்த ராமகிருஷ்ணா நகரில் ஓடை செல்கிறது. பொதுமக்கள், வாகனங்கள் செல்லும் வகையில், இதன் குறுக்கே சிறுபாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் தான் முக்கிய வழித்தடமாக உள்ளது. தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இது, திறந்தவெளியாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். பாலத்தில் பாதுகாப்பு சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குண்டும், குழியுமான சாலையால் அவதி: எலச்சிபாளையம் ஒன்றியம், திம்மராவுத்தம்பட்டியிலிருந்து கணக்கம்பட்டிக்கு செல்லும் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலை பல வருடங்களாக குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. வாகனஓட்டிகள் செல்லமுடியாமல் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விபத்து வாய்ப்பும் அதிகரித்துள்ளது. எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

முட்புதரை அகற்றணும்! பள்ளிபாளையம் அடுத்த, ஓடப்பள்ளி தடுப்பணை பாலத்திற்கு செல்லும் சாலையோரத்தில் மரக்கன்றுகள் வைக்கப்பட்டு, தற்போது வளர்ச்சி அடைந்து வருகிறது. பராமரிப்பு இல்லாததால் சுற்றிலும் முட்புதர் வளர்ந்து, வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. மேலும், சில மரக்கன்றுகள் சேதமடைந்து விட்டன. மற்றவையும் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, முட்புதரை அகற்றிவிட்டு, மரக்கன்றுகளை பராமரிப்பு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X