பொது செய்தி

தமிழ்நாடு

சாலை பணிகள் தீவிரம்

Added : பிப் 12, 2020
Advertisement

பள்ளிபாளையம்: வசந்தநகர் பகுதியில், சாலை அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்து வருகிறது. பள்ளிபாளையம் ஒன்றியம், வசந்தநகரை சுற்றிலும் ஏராளமான பகுதிகள் உள்ளன. மேலும் குடியிருப்புகளும் அதிகரித்து வருகின்றன. இப்பகுதியில் செல்லும் சாலைகள் மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாகவும், பள்ளமாகவும் காணப்பட்டது. வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். குறிப்பாக இரவு நேரத்தில் டூ வீலரில் வயதானவர்கள் செல்லும் போது மிகவும் சிரமப்பட்டனர். மழை பெய்தால் சேறும், சகதியுமாக மாறிவிடும். தற்போது, இப்பகுதியில் புதியதாக தார்ச்சாலைகள் அமைக்கும் பணி கடந்த ஓரிரு நாட்களாக நடந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X