பொது செய்தி

தமிழ்நாடு

யுவராஜ் வழக்கு ஒத்தி வைப்பு

Added : பிப் 12, 2020
Advertisement

நாமக்கல்: சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த பொறியாளர் கோகுல்ராஜ், 23. அவர், 2015, ஜூன், 23ல், பள்ளிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக, தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட, 17 பேரை, நாமக்கல் சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். விசாரணைக்காக, 2017, டிச., 19ல் யுவராஜை, மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, நீதிமன்றத்தில், நீதிபதி இளவழகனுக்கு எதிராக, ஆவேசமாக பேசியதாக, யுவராஜ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு, நாமக்கல் முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், நேற்று விசாரணைக்கு வந்தது. திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள யுவராஜை, போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து, வழக்கு விசாரணையை, ஏப்., 8க்கு ஒத்திவைத்து, மாஜிஸ்திரேட் ஜெயந்தி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X