பொது செய்தி

தமிழ்நாடு

குழு அமைத்து பிரச்னைக்கு தீர்வு: 'நெக்' அமைப்புக்கு கலெக்டர் அறிவுரை

Added : பிப் 12, 2020
Advertisement

நாமக்கல்: 'தலா, மூன்று பேர் கொண்ட குழு அமைத்து பிரச்னைக்கு சுமுக தீர்வு காண வேண்டும்' என, பண்ணையாளர்கள் மற்றும் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழுவுக்கு, கலெக்டர் அறிவுறுத்தினார்.
நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தியாகும் முட்டைகளுக்கு, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்) தினமும் விலை நிர்ணயிக்கிறது. இந்நிலையில், முட்டை விலை நிர்ணயத்தில் குளறுபடி நடப்பதாக கூறி, கடந்த, 6ல், 100க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணையாளர்கள், நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து, அலுவலகத்தை பூட்டி, போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக, தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல உதவி பொது மேலாளர் பாலசுப்ரமணியம் அளித்த புகார்படி, 12 கோழிப்பண்ணையாளர்கள் மீது, நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். கடந்த, ஐந்து நாட்களாக, தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் பூட்டப்பட்ட நிலையிலேயே இருந்தது. அந்த அலுவலகத்தை திறக்க, கலெக்டர் மெகராஜ், எஸ்.பி., அருளரசு ஆகியோர் போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதையடுத்து, அலுவலகத்தை பூட்டியவர்கள், போலீசாரிடம் சாவியை ஒப்படைத்ததையடுத்து, போலீசார், நேற்று அலுவலகத்தை திறந்து, தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவினரிடம் ஒப்படைத்தனர். மேலும், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளையும் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் மெகராஜ், எஸ்.பி., அருளரசு ஆகியோர் முன்னிலையில், இப்பிரச்னை தொடர்பாக, நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, 'வாட்ஸ் ஆப்' மூலம் விலை நிர்ணயம் செய்ய கூடாது; கூட்டம் நடத்தியே, முட்டை விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என, பண்ணையாளர்கள் வலியுறுத்தினர். அதையடுத்து, 'தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவுக்கு (நெக்) ஆதரவானவர்கள், எதிரானவர்கள் என, இரு தரப்பிலும், தலா, மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து, ஒருவாரத்துக்குள் பிரச்னைகளை சுமுகமாக பேசி தீர்த்து கொள்ள வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டது. டி.ஆர்.ஓ., துர்கா மூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X