சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியரின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்தவர் கைது

Added : பிப் 12, 2020
Advertisement

ப.வேலூர்: நாமக்கல் மாவட்ட காவல்துறை சமூக ஊடகவியல் பிரிவினர், சமூக ஊடகங்களை கண்காணித்து கொண்டிருந்தனர். பரமத்தி அடுத்த சோழசிராமணி, மாரப்பம்பாளையத்தை சேர்ந்த குருசாமி, 35, என்பவர், சிறுமிகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து, தனக்கென்று போலியாக, ஒரு முகநூல் கணக்கு துவங்கி, மொபைல் போன் மூலம், முகநூல் பக்கத்திலும், வாட்ஸ் ஆப்பிலும் பதிவேற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. எஸ்.பி., அருளரசு உத்தரவின்படி பேரில், மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுபாஷ், சமூக ஊடகவியல் பிரிவினரின் புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்தார். அதையடுத்து, குருசாமியை பிடித்து விசாரித்தனர். அதில், சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ள ஓட்டலில் பணிபுரிந்து கொண்டிருப்பதாகவும், விடுமுறையில் தன் சொந்த ஊருக்கு வந்தபோது, மொபைல் போன் மூலம், சிறுமிகளின் ஆபாச படங்களை முகநூலிலும், வாட்ஸ் ஆப்பிலும் பதிவேற்றம் செய்ததை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து மொபைல் போனை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X