பள்ளிபாளையம் பஸ் நிறுத்தத்தில் கால அட்டவணை வைக்கப்படுமா?

Added : பிப் 12, 2020
Share
Advertisement

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் பஸ் நிறுத்தத்தில் கால அட்டவணை இல்லாததால், கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.
பள்ளிபாளையம் பஸ் நிறுத்தத்தில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இருக்கை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மின்வசதி வசதிகள் அடங்கிய, இரண்டு நிழற்கூடங்கள் கட்டப்பட்டன. நாமக்கல், சேலம், ராசிபுரம், திருச்செங்கோடு, சங்ககிரி, குமாரபாளையம் மற்றும் பல பகுதிகளுக்கு ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை பஸ் வரும். மேலும், கிராமங்களுக்கும் பஸ் வரும். ஆனால் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் வந்து செல்லும். குறிப்பாக, பள்ளிபாளையத்தில் இருந்து, சேந்தமங்கலம், ஓமலூர், வேலூர், சோழசிராமணி, மேட்டூர் மற்றும் பல பகுதிகளுக்கு, ஒரு சில பஸ்கள் தான் வரும். இந்த பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள், பஸ் எப்போதும் வரும், எந்த நேரத்திற்கு வரும், ஒரு வேளை பஸ் போய் விட்டதா என, தெரியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, பயணிகளின் நலன்கருதி பஸ் நிறுத்தத்தில் கால அட்டவணை, மணிக்கூண்டு அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X