வீணாகும் குப்பைத் தொட்டிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா?

Added : பிப் 12, 2020
Advertisement

ராசிபுரம்: ராசிபுரத்தில், 20க்கும் மேற்பட்ட குப்பைத் தொட்டிகளை பயன்படுத்தாமல் வீணடித்துள்ளனர். ராசிபுரம் நகராட்சியில், 27 வார்டுகள் உள்ளன. நகராட்சியில் சேரும் குப்பையை, கவுண்டம்பாளையம் ஏரி, சேலம் ரோடு, தட்டாங்குட்டை ஏரி, கோனேரிப்பட்டி ஏரிகளில் கொட்டுகின்றனர். தட்டாங்குட்டை ஏரி பகுதியில்தான் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பெரியளவில் குப்பையை பிரிக்கும் கிடங்கு உள்ளது. இதற்கு குப்பை கொண்டு செல்ல பெரிய அளவில் இரும்பால் ஆன தொட்டிகள் மற்றும் அதை கொண்டு செல்ல பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட லாரிகளும் வாங்கப்பட்டன. குப்பைத் தொட்டிகளை வீதிக்கு ஒன்று அல்லது இரண்டு இடங்களில் வைக்கப்பட்டன. ஆனால், சில வருடங்களில் அவற்றை பயன்படுத்துவதை குறைத்துவிட்டனர். தற்போது பயன்படுத்தாத இரும்புத் தொட்டிகள் உழவர் சந்தை மூலையில் குவிக்கப்பட்டுள்ளன. அவை பயன்படுத்தப்படாமல் துருப்பிடித்து தகரமாகி வருகின்றன. நகரத்தில் இன்னும் பல இடங்களில் குப்பைத் தொட்டிகள் தேவைப்படுகின்றன. வீதிகளில், சாக்கடை ஓரங்களில் குப்பையை கீழே கொட்டி வருகின்றனர். எனவே, குப்பைத் தொட்டிகளை பராமரித்து தேவையான இடங்களில் வைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X