கொரோனா பயத்தில் சீனாவில் தவிக்கும் இந்தியர்கள்

Updated : பிப் 12, 2020 | Added : பிப் 12, 2020
Share
Advertisement
நம்மவர்கள் கேளிக்கை காட்டும் ஒரு டி.வி.,நிகழ்ச்சி முன் உட்கார்ந்து அதன் பங்கேற்பவர்களோடு சேர்ந்து ‛ஒரு ரூபாய் ஒரு ரூபாய்' என்று கத்திக் கொண்டு இருந்த அதே தருணத்தில் நமது தினமலர் இணையதளத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பதற்குள் எங்களைக் காப்பாற்றுங்கள் என்ற இந்தியர்களின் கதறல் குரல் சீனாவில் இருந்து மின்னஞ்சலாக வந்துள்ளது.இதுதான் அந்த மெயில்:Prakashraj - ( Posted via: Dinamalar Android Applatest tamil news


நம்மவர்கள் கேளிக்கை காட்டும் ஒரு டி.வி.,நிகழ்ச்சி முன் உட்கார்ந்து அதன் பங்கேற்பவர்களோடு சேர்ந்து ‛ஒரு ரூபாய் ஒரு ரூபாய்' என்று கத்திக் கொண்டு இருந்த அதே தருணத்தில் நமது தினமலர் இணையதளத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பதற்குள் எங்களைக் காப்பாற்றுங்கள் என்ற இந்தியர்களின் கதறல் குரல் சீனாவில் இருந்து மின்னஞ்சலாக வந்துள்ளது.
இதுதான் அந்த மெயில்:
Prakashraj - ( Posted via: Dinamalar Android App )11-பிப்-202010:03:12 IST Report AbusePlz help me we are totally 10 members here indian workers in china plz informed to indian governm ent bcoz situation is very critical stay in china ningbo zhejiang province....plz help us...we are company workers ....totaly 10 members...communicate via dinamalar...plz this news take over to the our government...
இதன் பொருள்:தென்கிழக்கு சீனாவில் உள்ள நிஞ்சபோ ஜீஜியாங் என்ற இடத்தில் இருந்து பேசுகிறோம் நாங்கள் பத்து பேர் இந்தியாவைச் சார்ந்தவர்கள் இருக்கிறோம் இங்கே கொரோனா வைரசால் நிலமை மோசமாகிக் கொண்டேயிருக்கிறது தயவு செய்து எங்களது நிலமையை நமது அரசாங்கத்திடம் சொல்லி காப்பாற்றுங்கள் -என்பதாகும் பிரகாஷ்ராஜ் என்பவர் இந்த மெயிலை அனுப்பியுள்ளார்.
அவரிடம் மேற்கொண்டு இது தொடர்பாக தொடர்பு கொள்ள முடியாத நிலையில், சீனாவின் செங்கோவ் என்ற இடத்தில் உள்ள நட்சத்திர ஒட்டலில் வேலை பார்த்த நாகூர் கனி என்பவர் சில மாதங்களுக்கு முன்புதான் தனது சொந்த ஊரான தேவகோட்டை திரும்பியிருந்தார்அவரிடம் இப்படி ஒரு மெயில் வந்துள்ளது பற்றி பேசினோம்.


latest tamil news


இந்த இடம் எனக்கு தெரியும் இந்தியாவில் இருந்து ஐடி வேலை வாய்ப்பு தொடர்பாக சீனா வருபவர்கள் பெரும்பாலும் இங்குதான் வருவர் இவர் பத்து பேர் என்று குறிப்பிட்டுள்ளது இவரது குழுவைச் சார்ந்தவர்களாக இருக்கும் உண்மையில் இந்தப்பகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமான பேர் இருப்பர் அவர்களின் அவலக்குரலுக்கு மதிப்பு அளித்து காப்பாற்ற வேண்டியது நமது கடமை என்றார்.


latest tamil news


இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்லுங்களேன் என்றோம்
உண்மையில் சீனா அமெரிக்காவிற்கு சவால் விடும் வகையில் அனைத்து துறையிலும் வேகமாக வளர்ந்துவரும் நாடாகும். சீனா என்றால் பாம்பு பல்லி சாப்பிடுபவர்கள் என்பதை மட்டும் மனதில் ஏற்றிவைத்திருக்கின்றனர் அது உண்மை என்றாலும் அது மட்டுமே உண்மை அல்ல.
நமக்கென ஒரு மொழி நமக்கென ஒரு தேசம் நமக்கென ஒரு வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் அவர்கள் அங்கே வாட்ஸ் அப்போ பேஸ் புக்கோ கிரிக்கெட்டோ கிடையாது அதெல்லாம் நேரக்கொல்லிகள் என்று முடிவு செய்து ஒதுக்கிவைத்துள்ளனர்.
அந்த நாட்டிற்கு என்று தனி தகவல் தொடர்பு செயலி உள்ளது அதில் எல்லா தகவல்களையும் பதிந்து இருப்பதால் அரசுக்கு முரணாண ஒரு விஷயத்தை யாராவது பதிந்தால் அடுத்த நிமிடமே வாசலில் போலீஸ் வந்து நிற்கும்.
இந்த நிலையில் கொரோனா வைரசை லேசாக எடை போட்டுவிட்டனர் ஆனால் வைரசைக் கண்டுபிடித்த டாக்டரையே காவு வாங்குமளவிற்கு போனபிறகுதான் அதன் விபரீதத்தை புரிந்து கொண்டனர்.
ஒன்பது நாட்களில் ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய ஆஸ்பத்திரியை கட்டி பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் வைத்து வைத்தியம் பார்த்து வருகின்றனர்.
பள்ளி கல்லுாரிகள் வேலை பார்க்குமிடங்கள் என அனைத்தையும் மூடிவிட்டனர் மக்கள் நெருக்கமாக புழங்கும் மார்கெட் பகுதிகளும் மூடப்பட்டுவிட்டன நாங்கள் சொல்லும் வரை வீட்டிற்குள்ளேயே இரு என்று அரசாங்கம் சொல்லிவிட்டால் ஏன் எதற்கு என்று கேட்காமல் மூன்று வேளையும் நுாடுல்சையும் கஞ்சியையும் சாப்பிட்டுக் கொண்டே சீனர்கள் உயிர்வாழ்ந்துவிடுவர் இந்த இடத்தில்தான் அங்குள்ள நமது இந்தியர்களுக்கு சிக்கல் வருகிறது.
இந்தியர்கள் அறை எடுத்துதான் தங்கயிருக்கின்றனர் அவர்களுக்கு சரியான சாப்பாடு கிடைக்கவில்லை வேலை பார்ப்பவர்களுக்கு வேலை இல்லை வருமானம் இல்லை ஊருக்கு திரும்ப விமானங்கள் இல்லை இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினரின் கவலை என்று நிறைய மனஅழுத்தத்தில் உள்ளனர்.
சீனாவைப் பொறுத்தவரை இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதும்,பாதிக்கப்பட்ட வுகான் மாகாணத்தில் இருந்து வெளியேறிய பல லட்சம் மக்கள் எங்கெல்லாம் நோயை பரப்பிக்கொண்டு இருக்கிறார்களோ என்ற பயமும் கவலைதரும் விஷயமாகும்.
நோயை கட்டுப்படுத்த வேண்டும் வந்த நோயை குணப்படுத்த வேண்டும் ஆனால் இன்னமும் நோயின் தன்மை குறித்துதான் ஆராய்ந்து வருகின்றனர் அதற்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் அதுவரை மக்கள் பொறுமை காக்கவேண்டும்.
நல்ல வேலை நல்ல படிப்பு நல்ல ஊர் என்ற சீனாவின் பிம்பம் லேசாக மங்கியிருந்தாலும் அவர்கள் சார்சில் இருந்து மீண்டது போல கொரோனாவில் இருந்தும் மீண்டு விடுவார்கள் அவர்கள் மீண்டு வந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வரும்வரை இந்தியர்கள் ஏன் மன உளைச்சலில் இருக்கவேண்டும் என்பதுதான் கேள்வி.
வுகான் மாகணத்தில் இருந்த இந்தியர்களை காப்பாற்றியது போலவே சீனாவில் உள்ள மற்ற இந்தியர்களையும் காப்பாற்ற வேண்டும் இது அவசரம் மட்டுமல்ல அவசியமும் கூட என்று கூறி முடித்தார் நாகூர் கனி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X