சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சோளத்தட்டுக்கு அடியில் மணல் கடத்தல்: 2 பேர் மீது வழக்கு

Added : பிப் 12, 2020
Advertisement

கோபிசெட்டிபாளையம்: கோபி தாலுகா, கணக்கம்பாளையம் புதுக்காலனி அருகே நேற்று முன்தினம் இரவு, 12:00 மணிக்கு டிராக்டர் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்பகுதி மக்கள், டிராக்டரை பிடித்தனர். வருவாய்த்துறையினர், பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அதற்குள் டிராக்டரை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் ஒருவர் அங்கிருந்து தப்பினர். விசாரணையில் டிராக்டரில், சோளத்தட்டு கட்டுக்கு அடியில், மணல் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. பின், போலீசார் விசாரணையில், தப்பிய இருவர் பெருமுகையை சேர்ந்த முத்துசாமி, 45, ஈஸ்வரன், 35, என தெரிந்தது. வி.ஏ.ஓ., ஜெயந்தன் கொடுத்த புகார்படி, பங்களாப்புதூர் போலீசார் இருவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஒரு யூனிட் மணலுடன் சிக்கிய டிராக்டரை, பறிமுதல் செய்து பங்களாப்புதூர் போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X