பொது செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்தல் தடுப்பு: வி.ஏ.ஓ., நடவடிக்கை

Added : பிப் 12, 2020
Advertisement

குளித்தலை: காவிரி ஆற்றில் பைக்கில் மணல் கடத்திச் சென்றவர்களை, அதிகாரிகள் எச்சரித்து, மணல் மூட்டைகளை பறிமுதல் செய்தனர். 'குளித்தலை, காவிரி ஆற்றில் மணல் கடத்தலை தடுக்கவேண்டும்' என, சப் - கலெக்டர் ?ஷக் அப்துல் ரகுமான் உத்தரவின் பேரில், நேற்று அதிகாலை, காவிரிநகர், கடம்பர்கோவில், பெரியபாலம் காவிரி பரிசல்துறை ஆகிய பகுதிகளில், மொபட்டில் மணல் கடத்தியவர்களை வி.ஏ.ஓ., முத்துகுமார் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் குமரேசன் கண்காணித்து வந்தனர். அப்போது, மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை எச்சரித்து, அவர்களிடமிருந்து மணல் மூட்டைகளை பறிமுதல் செய்தனர். மணல் மூட்டைகளை பொதுப் பணித்துறை ஆற்று பாதுகாப்பு எஸ்.டி.ஓ., விடம் ஒப்படைத்தனர். 'இந்த கண்காணிப்பு பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும்' எனவும், அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X